சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர். கணியூர் பகுதியில் நடந்த விழாவில், கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் பங்கேற்று பனை மரக்கன்றுகளை நடவு செய்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியும் பொதுமக்களால் ஏற்கப்பட்டது. சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்துக்கொள்ள தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது என்று எம்.பி. கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.