கோவை: திருக்குறளை ஒப்புவிக்கும் முதல் வகுப்பு மாணவி

கோவை சூலூரைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்த சூர்யா-மீனா தம்பதியரின் மகளான கயல், காமாட்சிபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை-தாய் இருவரும் திருக்குறளின் மீது கொண்ட பாசத்தால், சிறுவயதில் இருந்தே கயலுக்கு திருக்குறளை மனப்பாடம் செய்து சொல்லக் கற்றுத்தந்துள்ளனர். இதனால், தற்போது 60-க்கும் மேற்பட்ட திருக்குறள்களை துல்லியமாக மழலைக் குரலில் ஒப்புவித்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். அபார நினைவாற்றலுக்காக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் பாராட்டுகளைப் பெற்றுள்ள கயல், திருக்குறள் மட்டும் அல்லாமல் நடனத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.தங்களது மகளின் திறமையைப் பற்றி பெற்றோர் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி