கோவை: சொட்டு நீர் பாசன மானியம்; தோட்டக்கலைத்துறை அழைப்பு

சூலூா் பகுதியில், விவசாய வேலைக்கு ஆட்கள் இல்லாத நிலையை எதிர்கொள்வதை சமாளிக்க, தானியங்கி சொட்டு நீர் பாசன அமைப்பை மானியத்தில் வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

திட்டத்தில், சிறு/குறு விவசாயிகளுக்கு ₹22,000 மற்றும் பெரிய விவசாயிகளுக்கு ₹18,000-ம் தொகை பின்னேற்பு மானியமாக, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள், சான்றுகளுடன் (சிட்டா, நில வரைபடம், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு நகல், புகைப்படம்) சூலூா் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2990014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி