கோவை, பெ. நா. பாளையம் தடாகம் வட்டாரத்துக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் மலையடிவாரப் பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று நேற்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கோவை வனச்சரகர் திருமுருகன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதற்கட்ட தகவல்களின்படி, உடல்நிலை பாதிப்பு காரணமாக யானை கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.