கோவையில் கள்ளநோட்டு மோசடி: ஒருவர் கைது

கோவை சூலூர் அருகே கருமத்தம்பட்டியில், நேற்று மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன என்ற ரகசிய தகவலின் பேரில், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டார், நான்கு பேர் தப்பியோடினர். டோல்கேட் வழியாக வந்த காரில் சோதனை செய்த போலீசார், 2000 மற்றும் 500 ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், அதிநவீன பிரிண்டர், செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர் தர்மபுரியைச் சேர்ந்த இளவரசன் என அடையாளம் காணப்பட்டார். தப்பியோடியவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி