கணியூரில் நடைபெற்ற மகளிர் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட ஜல் ஜீவன் மிஷன் இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ் மற்றும் கோவை மாவட்ட துணை ஆட்சியர் சங்கேத் பல்வந்த் வாகே, ஆகியோர், குடிநீர் பயன்பாடு மற்றும் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். சிறப்பாக பணியாற்றிய ஊராட்சி முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த ஜல் ஜீவன் திட்ட இயக்குனர் ராஜலட்சுமி தேவராஜ், செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் குடிநீர் மேலாண்மை பயன்பாட்டில் கோவை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது.
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் கோவை மாவட்டம் குடிநீர் மேலாண்மை மற்றும் இயற்கை பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, கணியூர் ஊராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.