விழாவின் தொடக்கமாக, பள்ளித் தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தொடர்ந்து, பள்ளியின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிக் குறித்து சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. விழாவில், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. முன்னாள் மாணவர்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கினர். கல்வித்துறையின் சிறப்பு விருந்தினர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தனர். மேலும், பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதியளித்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்