கோவை: விபத்து - கல்லூரி மாணவி பலி.. 4 பேர் காயம்

மதுக்கரை அருகே மேற்கு புறவழிச்சாலையில் பயணிகள் ஆட்டோ மீது சரக்கு ஆட்டோ மோதியதில் கல்லூரி மாணவி நிர்மலாதேவி (19) நேற்று உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர். விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சிக்னல் மற்றும் வேகத்தடைகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேற்கு புறவழிச்சாலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி