கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை பகுதியில் இன்று தேங்காய் மட்டை ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது. சூலூர் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.