கோவை தெற்கு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன், 22 வயது வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்படுத்திக்கொண்டார். நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமாகி, இருவரும் நேரிலும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளின் போது, அந்த வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் பாலியல் ரீதியான தொந்தரவுகளில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமிக்கு நடந்த இந்த அத்துமீறல் குறித்து அவரது தாயாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக கோவை தெற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் தொந்தரவு அளித்த 22 வயது வாலிபரை நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.