கோவை: மலுமிச்சம்பட்டியில் வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பு

கோவை மலுமிச்சம்பட்டி குடியிருப்பு பகுதியில் இன்று ஒரு வீட்டிற்குள் நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்த குடும்பத்தினர் இயற்கை வன உயிரின ஆர்வலர் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் மோகன் மோனா, நச்சு நாகப்பாம்பை சாதுரியமாக உயிருடன் பிடித்து பாதுகாப்பாக மீட்டார். பின்னர், வனத்துறை அனுமதியுடன் அந்தப் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி