கோவை: 3 லாரிகளில் கடத்தப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை கவுண்டம்பாளையம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, சாலையோரத்தில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தப்பட்டிருந்த 3 மினி லாரிகளில் இருந்து இந்த அரிசி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு லாரி ஓட்டுநர்கள் பிடிபட்டனர், ஒருவர் தப்பியோடியதாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் லாரிகள் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி