கோவை: அடுத்தடுத்து மோதிக்கொண்ட 3 கார்கள்; பரபரப்பு

கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த கலைச் செல்வன், காரில் நம்பியூருக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவினாசியை அடுத்த கருமாபாளையம் தண்ணீர்பந்தல் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற கார் மற்றும் எதிர் திசையில் வந்த கார் மீது மோதி, சாலையோரம் இருந்த மரம் இழைப்பு மில்லுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கலைச் செல்வன் மற்றும் மற்றொரு காரில் வந்த செல்வம் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி