கோவை அருகே கருமத்தம்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வடுகபாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், செங்காளியப்பன் ஆகியோர் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கேன்களில் வைத்திருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.