கோவை: வெள்ளியங்கிரியில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவை பூண்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். மலையேற்ற காலத்திலேயே பக்தர்களால் வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை வனத் துறை மற்றும் தன்னார்வலர்கள் சேர்ந்து அகற்றினர். 

இதன் மூலம் 10,905 கிலோ (11 டன்) பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் ரீசைக்கிளிங் நிறுவனம் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றப்பட்டன. குடிநீர் பாட்டில்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டும், பணத்தை திரும்பப் பெறும் நடைமுறை இருந்தும், பலர் பாட்டில்களை வனப் பகுதியில் விட்டுச் சென்றனர். இதையடுத்து அதிகாரிகள் பக்தர்கள் விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி