பைனான்ஸ் ஊழியரிடம் பணம் பறித்த வாலிபர் கைது

கோவை அடுத்த பழையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வைரவமூர்த்தி(37). பைனான்ஸ் நிறுவன ஊழியர். இவர் நேற்று பைக்கில் தனது நண்பர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே சென்றபோது, பைக் ரிப்பேர் ஆனது. உடனே வைரவமூர்த்தியின் நண்பர் மெக்கானிக்கை அழைத்து வர சென்றார். தனியாக நின்றிருந்த வைரவமூர்த்தியிடம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் குனியமுத்தூருக்கு எப்படி செல்ல வேண்டும் என முகவரி கேட்டுக்கொண்டே அருகே வந்தார். பின்னர் அவர் திடீரென அவர் கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து வைரவமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், பணம் பறித்தது தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ்(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி