காணாமல் போன சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார்

கோவை மாவட்டம் ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர், 12 வயதான சிறுமி; இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிறுமி, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வெளியில் சென்றுள்ளார், புகாரின் பேரில் மாயமான சிறுமியை கண்டுபிடிக்க போலீசார், ஆறு தனிப்படையை ஏற்படுத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரணைநடத்தினர். இந்நிலையில், நேற்றிரவு பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்டில் நின்று கொண்டிருந்த சிறுமியை பொள்ளாச்சி போலீசார் மீட்டனர். போலீசார் கூறுகையில், 'சிறுமி ஒண்டிப்புதுாரில் இருந்து உக்கடம் நோக்கி செல்லும் பஸ்ஸில் சென்றது தெரிந்தது. பொள்ளாச்சி, வால்பாறை, கொழிஞ்சாம்பாறை ஆகிய பகுதிகளில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்டில் நின்று கொண்டிருந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மொபைல் போன் அதிகம் பார்த்ததால், பெற்றோர் கண்டித்ததன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதாக, சிறுமி தெரிவித்தார். உக்கடத்திலிருந்து, பழநி முருகன் கோவிலுக்கு சென்று, சுவாமி தரிசனம் செய்துள்ளார். பின், பொள்ளாச்சி வந்துள்ளார். பொள்ளாச்சியில் மழை பெய்ததால், பயத்தில் அருகில் இருந்த ஒருவரிடம் மொபைல்போனை வாங்கி தனது தாய்க்கு அழைத்துள்ளார். தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸார் சிறுமியை பத்திரமாக மீட்டு ஒப்படைத்தனர்' என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி