சூலூர்: அனுமதி இன்றி வீடு இடிப்பு: காவல் நிலையத்தில் புகார்

சூலூர் அருகே காட்டூர் மாகாளியம்மன் கோவில் விரிவாக்கப் பணியின் போது, உரிமையாளரின் அனுமதி இன்றி பழனியம்மாள் என்பவரின் வீடு இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கோவில் புனரமைப்புக்காக 10 அடி இடம் வழங்கியிருந்த நிலையில், திடீரென வீடு முழுவதும் இடிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், கல்யாணி மற்றும் குமார் மீது சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி