சிங்காநல்லூர் அடுத்த இருகூர் பகுதி லட்சுமி நகரைச் சேர்ந்த சாம்ராஜ் (வயது 44) என்பவர், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. நேற்று தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஒண்டிப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, மூன்று நபர்கள் அவர்களை வழிமறித்து தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் தங்களிடம் இருசக்கர வாகனத்தை கேட்டதாகவும், சாம்ராஜ் அது தனது வாகனம் அல்ல என்று கூறியதால் ஆத்திரமடைந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த சாண்டி என்ற சரவணகுமார் (23), பாலமுரளி (23), சஞ்சய்குமார் (22) ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.