சிங்காநல்லூர்: சமுதாயக்கூடம் இடிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு

சிங்காநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாயக் கூடத்தை ஒப்பந்த ஊழியர்கள் இடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் மூண்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அனுமதியின்றி இடிக்க முயன்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். பழைய கட்டிடங்களை இடிக்கும்போது தவறுதலாக சமுதாயக் கூடத்தை இடிக்க முயன்றதாகவும், இனி இடிக்க மாட்டோம் என்றும் ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி