கோயம்புத்தூர் சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையம் சர்க்கரை செட்டியார் நகரைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 75) நேற்று மோட்டார் சைக்கிளில் கோவை-திருச்சி சாலையில் சிங்காநல்லூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மகாலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு இ. எஸ். ஐ. மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாமளாபுரத்தைச் சேர்ந்த டிப்பர் லாரி ஓட்டுனர் சம்பத் (வயது 55) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.