கோவை ரயில் நிலையம் பின்புற சாலையில் பல நாட்களாக பராமரிப்பு இல்லாததால் பெரிய குழிகள் உருவாகி மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் குழிகளில் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்கள் தொடர்கின்றன. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். உடனடி சாலை சீரமைப்பு மற்றும் மின்விளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.