இந்த முன்பதிவு செய்யும் பயணிகளின் வசதிக்காக, 'லிங்க் டிக்கெட்' வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியின் கீழ், பயணிகள் முன்பதிவு டிக்கெட் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.30 செலுத்தி, பேருந்து நிலையங்களில் இருந்து நகர பேருந்துகளில் வேறு இடங்களுக்குச் செல்லலாம்.
அதேபோல, வேறு இடங்களில் இருந்து இந்த மூன்று பேருந்து நிலையங்களுக்கும் செல்ல முடியும். இந்த 'லிங்க் டிக்கெட்' வசதியை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும்போதோ அல்லது வந்திறங்கும்போதோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.