பசுமை தொழில் முனைவோர் திட்டம் - ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பசுமை தொழில் முனைவோர் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த திட்டம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு, இலாபகரமான உற்பத்தி மற்றும் விற்பனை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் பசுமை தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் தொழில் நிறுவனங்களுக்கு மூன்று கட்டங்களாக தலா ரூ. 4 லட்சம் வீதம் தொழில் வளர்ச்சி நிதி வழங்கப்படும். இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியான நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 25, 2024க்குள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி