கிழக்கு மண்டலத்தில் ஒண்டிப்புதூர் மைதானத்தில் நடைபெற்ற முகாமில் ரூ. 7, 50, 000 வசூலிக்கப்பட்டது. மேற்கு மண்டலத்தில் மஞ்சீஸ்வரி காலனி மற்றும் சீரணாய்க்கன்பாளையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் ரூ. 6, 80, 000 வசூலிக்கப்பட்டது.
தெற்கு மண்டலத்தில் குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற முகாமில் ரூ. 5, 90, 000 வசூலிக்கப்பட்டது. வடக்கு மண்டலத்தில் காந்தி மாநகர் மற்றும் ஜனதா நகர் பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் ரூ. 6, 20, 000 வசூலிக்கப்பட்டது. மத்திய மண்டலத்தில் நாராயணசாமி வீதி மற்றும் கெம்பட்டி காலனி பகுதிகளில் நடைபெற்ற முகாம்களில் ரூ. 7, 20, 225 வசூலிக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டின் முதல் பாதியில் வரி வசூல் 45% ஆக இருந்தது. இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 50% ஐ எட்டியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் இன்று (அக்.,8) தெரிவித்தார். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரி வசூல் 5% அதிகரித்துள்ளது, என்று அவர் கூறினார்.