கோவையில் ஆகஸ்ட் 12 முதல் 15 வரை நடைபெறவுள்ள ஸ்கால் இந்தியா தேசிய மாநாடு 2026-ன் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை நிபுணர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டின் மூலம், தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்தளங்களை தேசிய, சர்வதேச அளவில் கொண்டு செல்ல ஸ்கால் நிர்வாகிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். கோவையில் முதன்முறையாக நடக்கும் இந்த மாநாடு, இத்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.