மாடி படிக்கட்டு கைப்பிடியில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் அசோகன் (62). இவர், கோவை வந்து மத்திய சிறை அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கிருந்தார். இந்த நிலையில் ஓட்டல் ஊழியர்கள் நேற்று முன்தினம் ஓட்டல் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது 5வது மாடி படிக்கட்டின் கைப்பிடி ராடில் அசோகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஓட்டல் நிர்வாகத்தினர் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசோகனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி