டூவீலரில் இருந்த மண்ணுளிப் பாம்பு - வைரலாகும் வீடியோ!

கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் சாலையோரத்தில் நிறுத்தி சென்ற தன்னுடைய வண்டியின் பெட்டியை தினேஷ் திறந்திருக்கிறார். அப்போது பெட்டிக்குள் மண்ணுளிப் பாம்பு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அருகில் இருந்த பாம்பு பிடி வீரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு வந்து மண்ணுளிப் பாம்பை பத்திரமாக பிடித்தார்.

பின்னர் இந்த பாம்பு மதுக்கரை வனச்சரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அடர்ந்த காட்டில் விடப்பட்டது. பாம்பு பிடி வீரர் மண்ணுளிப் பாம்பை பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி