கோவை: பெண்ணை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டிய வாலிபர் கைது

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, இன்ஸ்டாகிராம் மூலம் தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் என்ற வாலிபரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி