ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. இதனால், சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலக சிட்டுக் குருவி தினத்தை முன்னிட்டு, நேச்சர் என்விரான்மென்ட் சர்வீஸ் டிரஸ்ட் (NEST) மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆகியவை இணைந்து விழிப்புணர்வு பேரணியை நேற்று கோவையில் நடத்தின. இந்த பேரணி, கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாடமி மண்டல மையத்திற்கு அருகில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் டி. வெங்கடேஷ் IFS ஆகியோர் இந்த பேரணியை தொடங்கி வைத்தனர்.
மேலும், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் கோவை நகர போக்குவரத்து துணை ஆணையர் அசோக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த பேரணியில், சிட்டுக் குருவிகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.