கோவை: சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

பெரியநாயக்கன்பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்த தொழிலாளி ரகுபதி (46), இன்று அதிகாலை மொபெட்டில் சென்று கொண்டிருந்தபோது, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கோட்டைப் பிரிவு அருகே ஒரு சரக்கு வேன் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலேயே உயிரிழந்தார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி