கோவை இருகூர் பகுதியில் காரில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண், தான் கடத்தப்படவில்லை எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனக்கும் தனது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும், காரில் இருந்தபோது கணவர் தன்னை அடித்ததாகவும், தானும் அவரை திருப்பி அடித்ததாகவும் அந்தப் பெண் வீடியோவில் தெரிவித்துள்ளார். முன்னதாக காரில் பெண் ஒருவர் கடத்தப்பட்டாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.