கோவை: சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு; எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும் கடுமையாக விமர்சித்தார். கோவை அருகே பெண் பாலியல் வன்கொடுமை, திண்டிவனத்தில் காவலரே மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவங்களையும், போதைப்பொருள் வியாபாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். நிரந்தர டி.ஜி.பி. நியமனத்தில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்தி