கோயம்புத்தூர் மத்திய சிறையில் விசாரணை கைதி ஆசிப் முஸ்தாகின் (33) காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்து, சிறை அறையில் இருந்த டியூப் லைட்டை உடைத்து அதிகாரிகளை மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சிறை அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்தினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.