கோவை: 15 செல்போன்கள் திருடிய இருவர் கைது

நேற்று முன்தினம் இரவு அன்னூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின போது, அவர்களிடம் 15 செல்போன்கள் இருந்தன. விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சுஜிகுட்டையைச் சேர்ந்த பழனிச்சாமியின் மகன் சூர்யகுமார் (21) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. 

மேலும், இவர்கள் குப்பேபாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டுகளில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 15 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரையும் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி