இதையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், பள்ளி-கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து கண்காணிக்க ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.