இதன் இடையே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, பா. ஜ. க தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி எம். எல். ஏ வுமான வானதி சீனிவாசன், யாத்திரை செல்வதற்காக விரதம் இருந்து கோவை காந்தி பார்க் அருகே அமைந்து உள்ள முருகன் கோவிலில் நேற்று மாலையிட்டுக் கொண்டார். அதோடு வருகிற ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்குகிறார். பாதயாத்திரையை தென்செரிமலை ஆதீனம் முத்து சிவராம சுவாமி அடிகளார் மற்றும் தத்துவ ஞான சபை ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்த ஆச்சார்யா ஆகியோர் துவங்கி வைக்க உள்ளனர். ஏழாம் தேதி காலை 9: 15 மணிக்கு ஈச்சனாரி விநாயகர் கோவிலில் பூஜை செய்யப்பட்டு பழனிக்கு யாத்திரை மேற்கொள்ளும் வானதி, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, திரு ஆவின் குடி, வழியாக பழனி மலையை சென்று அடைகிறார். மக்கள் நலன் வேண்டி செல்லும் இந்த யாத்திரை நிகழ்வில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் வானதி தெரிவித்து உள்ளார்.
எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனங்கள்