கோவை: காதி பேஷன் ஷோவில் மாணவர்கள்

கோவை, அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மெகா காதி பேஷன் ஷோ நிகழ்ச்சி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்திய அரசின் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் இந்த நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். காதி ஆடைகளை அணிந்து நடந்த மாணவர்கள் பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டன. 

மேலும், ஐந்து பேருக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டன. காதி ஆடைகளுக்கு இளைஞர்களிடையே உள்ள வரவேற்பை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

தொடர்புடைய செய்தி