கோவையில் செயல்பட்டு வரும் ஆதித்தமிழன் வீர சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் எர்த் ட்ராகன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள், நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டியில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். தலைமை ஆசான் நாகசுந்தரம் தலைமையில் பங்கேற்ற 16 மாணவர்களும் இந்த வெற்றியைப் பெற்று கோவை திரும்பினர். நேற்று ரயில் நிலையத்தில் அவர்களுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய போட்டிக்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.