கோவை: புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா, இந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி காலை, மாலை சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. நேற்று நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் திருப்பலியை கோவை மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் நிகழ்த்தினார். மழையிலும் உற்சாகத்துடன் நடைபெற்ற தேர் பவனியில், திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தேரை இழுத்தனர். தேர், புலியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஊர்வலமாக வந்தடைந்தது. விழாவையொட்டி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி