கோவை மாவட்டம் மோப்பரிபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் மனுக்களைப் பெற்ற அவர், தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அணுகி, விடுபட்ட வாக்காளர்களைப் பட்டியலில் சேர்க்க பி. எல். ஓ அதிகாரிகள் மற்றும் கட்சியினரை வலியுறுத்தினார்.