உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சுசீந்திரன் (39) வெளிநாட்டு தனியார் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊர் திரும்பிய அவர், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் தொழில் பயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.