கோவை: போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை

கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கவுண்டம்பாளையம் போலீசார் சங்கனூர் ரோட்டில் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற ரத்தினபுரியைச் சேர்ந்த 40 வயதுடைய மணிகண்டன் (எ) தாமரை என்பவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல், உக்கடம் வின்சென்ட் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்த பாலசுப்பிரமணி (30) மற்றும் ஜாபர் சாதிக் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி