கோவை எம். ஜி. ரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையடுத்து, வரும் திங்கட்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் எஸ். ஐ். எச். எஸ். காலனி, நேதாஜிபுரம், பெத்தேல் நகர், ஒண்டிப்புதூர் ஒரு பகுதி, வி. கே. என். நகர், மூகாம்பிகை அம்மன் நகர், சக்தி நகர், அம்மன் நகர், வசந்தா நகர் மற்றும் ஒண்டிப்புதூர்-திருச்சி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.