இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் புகார் அளித்தனர். அதன்பேரில் மதபோதகர் ஜான் ஜெபராஜை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வந்தனர். விசாரணை நடந்த முடிவில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோவை அழைத்துவந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வருகிற 25-ம் தேதி வரை ஜான் ஜெபராஜை நீதிமன்ற காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.