கோவை: மஞ்சள் நிறத்தில் ஆழ்துளை நீர், மக்கள் அவதி

கோவை, வெள்ளலூர் குப்பைக்கிடங்கின் தாக்கத்தால் சுற்றுவட்டார பகுதிகளான மகாலிங்கபுரம், கோணவாய்க்கான்பாளையம், ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆழ்துளை கிணறுகளில் இருந்து மஞ்சள் நிறத்தில் நுரையுடன் நீர் வருவதாகவும், மாநகராட்சி நீர் போதாததால் லாரி நீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் கே. எஸ். மோகன் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி