கோவை: வாலிபருக்கு ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை கலிக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீபேஸ்வரன் (30) உயிருக்கு ஆபத்தான பூஞ்சை தொற்று நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இதற்காக ரூ. 35.09 லட்சம் செலவானது. மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் தொகையை வழங்க மறுத்ததால், அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவச் செலவாக ரூ. 35.09 லட்சம், மன உளைச்சலுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் வழக்குச் செலவாக ரூ. 10 ஆயிரம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்தி