கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வேட்பு மனுவை நாம் தமிழர் மற்றும் அதிமுக கட்சிகள் எதிர்த்தன. நோட்டரி உள்ளிட்ட ஆவணங்களில் பிழைகள் இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இருப்பினும், தேர்தல் அதிகாரிகள் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு எதிராக எழுத்துப்பூர்வ புகார் அளிக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.