கோவை: வரிக்குறைப்பு தாக்கத்தை நேரில் ஆய்வு செய்த நிர்மலா

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிய, கோயம்புத்தூரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் திடீர் வருகை தந்தார். அங்கு வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்களுடன் கலந்துரையாடியதில், ஷாம்பு, பற்பசை, உணவுப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதாகவும், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் வருகை அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர், எல். ஐ. சி. யின் பீமா சகி திட்ட பயனாளிகளுடனும் அவர் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் மூலம் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு மக்களுக்கு நன்மை பயந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் உறுதிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி