சூலூரை அடுத்த அரசூரில், மதுபோதையில் உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய கூலித் தொழிலாளி ரங்கசாமி (40), பக்கத்து வீட்டுப் பெண் தாமரையிடம் (40) ஆபாச சைகை காட்டியதால் ஏற்பட்ட தகராறில், தாமரை, அவரது கணவர் கோவிந்தராஜ் (44) கட்டையால் தாக்கி கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பதியினரை கைது செய்தனர். கோவை கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கில், நீதிபதி பி.கே.சிவகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.